ரயில் பயணங்கள் எப்போதுமே ரம்மியமானது தான்,என்னதான் நம்ப இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தாலும் அந்த ஸ்டேஷன் நம்ப ஸ்டேஷனா இல்லாம இருக்க கூடாதா நினைக்கிற அளவுக்கு அந்த பயணம் தரும் அறிமுகங்கள் அவர்கள் தரும் அனுபவங்கள். இப்படியெல்லாம் எனக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் படத்துல வர மாதிரி பேசணும்னு ஆசைதான், ஆனா ஒரு சராசரி இந்தியனுக்கு தெரியும் ட்ரெயின்ல இடம் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு. டிக்கெட் வாங்காம இடம் கிடைக்கலனா கூட பரவால்ல, டிக்கெட் வாங்கிட்டு வித்தவுட்ல போறவன் கூட சண்டை போட்டு இடத்தை பிடிக்க வேண்டிய நிலைமையில் இருக்கோம்.

இந்திய ரயில்வே அந்த அனுபவங்களை எவ்வளவு மேம்படுத்த முடியுமோ அவ்வளவு மேம்படுத்த முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. முதல் விஷயம் பயணிகளிடையே நடக்குற சண்டை. அடிக்கடி ரயில் பயணங்களில் மிடில் பர்த்க்கும் லோயர் பர்த்க்கும் நடக்கிற சண்டை தான் முக்கியமானது . நிறைய நேரம் பார்த்திருப்பீங்க ரயில் கிளம்பத் தொடங்கின உடனே மிடில் பர்த்தை இறக்கிவிட்டு தூங்க ஆரம்பிச்சுடுவாங்க. இதனால லோயர் பெர்த்தில் இருக்கிறவங்க உட்கார வேண்டும் நினைச்சாலும் உட்கார முடியாது, இதைப் போய் கேட்க போனா சண்டையில் தான் முடியும். அதே மாதிரிதான் நைட்ல மிட்டில் பர்த்தை இறக்கி தூங்க நினைக்கும்போது லோயர் படத்துல இருக்குறவரு உட்கார்ந்து இருந்தா அது தர்மசங்கடமான நிலை ஆயிடும் இந்நிலையில் இதை தடுக்கிற வகையில் தான் இந்திய ரயில்வே ஒரு ரூல்ஸ் போட்டிருக்காங்க. மிடில் பேர்த் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்க பயன்படுத்த முடியும்.
அடுத்தது இந்த மிடில் பர்த் லோயர் பர்த் சண்டை எல்லாம் முடிச்சுட்டு நிம்மதியா தூங்கலாம் போகும் போதுதான் கரெக்டா டிடிஆர் வந்து உன் டிக்கெட் எங்க உன் ஐடி எங்கனு கேட்டு தூக்கத்தை டிஸ்டப் பண்ணுவாரு. அதுமாதிரி நடக்கக் கூடாது என்று சொல்லிட்டு தான் இந்திய ரயில்வே இரவு பத்து மணிக்கு மேல டிடிஆர் பயணிகளிடம் டிக்கெட் கேட்டு பரிசோதிக்க கூடாது என்று ஒரு விதி இருக்கு. ஆனா உங்க ரயில் பயணமே 10 மணிக்கு மேல தான்தொடங்குதுனா டிடிஆர் வந்து பரிசோதிக்க முடியும். நான் முதல்ல சொன்ன மாதிரி ரயில் பயணங்கள் ரம்மியமாய் இருக்குமா இருக்காதானு எனக்கு தெரியாது ஆனால் குறைந்தபட்சம் ரயிலில் பயணிக்கும் போது நமக்கான அடிப்படை உரிமைகளை தெரிஞ்சுகிட்ட அந்த பயணம் நிம்மதியாவாச்சு இருக்கும்.
